லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு மொராக்கோவின் டாங்கியர் நகரிலிருந்து சென்ற விமானத்தின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16ஆம் திகதி விமானம் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், வழக்கமான பரிசோதனையின் போது தரைத்தள பொறியியலாளர் ஒருவர் சடலத்தை கண்டுபிடித்துள்ளார்.
விசாரணையில், விமானத்தின் சக்கரப் பகுதியில் நிலவிய கடும் குளிர் மற்றும் குறைந்த ஒட்சிசன் அளவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனையில் இதயத் துடிப்பு நின்றமை, ஒட்சிசன் பற்றாக்குறை மற்றும் உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைந்தமை ஆகியவை உயிரிழப்புடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணை 2027 பெப்ரவரி 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





