தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை – மத்தள வெளியேறும் இடம்
வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை – கடவத்தை வெளியேறும் இடம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலை – மீரிகம நுழைவு இடம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலை – யக்கபிட்டிய வெளியேறும் இடம்
குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும், கவனமாகவும் வாகனங்களை செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





