நேபாள வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 95 ஆக உயர்வு; 403 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

நேபாள சுற்றுலாச் சபையின் சமீபத்திய தகவல்களின்படி, 61 நேபாள பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 403 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் 200 பெண்களும் 203 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், மாயமான வெளிநாட்டவர்கள் 26 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குவதாக சுற்றுலாச் சபை குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் தகவல்களை மேற்கோள்காட்டியுள்ள சுற்றுலாச் சபை, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியா–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவர் பகுதிக்குச் செல்லும் பயணத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore