பயனர்களின் கணக்குகளை மோசடியாளர்கள் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில், WhatsApp தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
WhatsApp தகவலின்படி, உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் Passkey வசதியை ஏற்கனவே அமைத்துள்ளனர். இதன் மூலம் கடவுச்சொல் அல்லது PIN-ஐ பயன்படுத்தாமல், கைரேகை, Face ID அல்லது சாதனத்தின் Screen Lock மூலம் கணக்கில் மீண்டும் உள்நுழைய முடியும்.
மேலும், WhatsApp-ன் Two-Step Verification பாதுகாப்பு வசதி மேம்படுத்தப்பட்டு, இனி எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளை உள்ளடக்கிய முழுமையான Password-ஐ பயன்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது.
இதனுடன், Android பயனர்களுக்காக புதிய Caller Context வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்புகளில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, அந்த எண்ணைப் பற்றிய கூடுதல் தகவல்களையும், அழைப்பவருடன் பொதுவான குழுக்கள் உள்ளனவா என்பதையும் அறிந்துகொள்ள இது உதவும்.
இந்த புதிய நடவடிக்கைகள் மூலம் மோசடி அழைப்புகள் மற்றும் கணக்கு கைப்பற்றும் முயற்சிகளை கட்டுப்படுத்துவதே WhatsApp-ன் நோக்கமாகும்.





