மேலதிக வகுப்புக்குச் சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயினர்

பலாங்கொடை: பலாங்கொடை, பின்னவல–எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் மூவரும் கடந்த 31ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றில் கலந்துகொள்வதற்காக தமது வீடுகளில் இருந்து புறப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, மாணவிகள் தொடர்பான தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

📞 பலாங்கொடை பொலிஸ் நிலையம்: 045-2287222
📞 பெற்றோர்: 076-7070913 / 077-1658788

மாணவிகள் தொடர்பான மேலதிக தகவல்களை கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore