இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்

இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறையில் முன்னோடியாகக் கருதப்படும் சிரேஷ்ட கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கியவராக அறியப்படும் கிவந்த அர்த்தசத், நாட்டின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவர் பிரபல திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு இலங்கை கலைத்துறைக்கு ஏற்பட்ட முக்கிய இழப்பாகக் கருதப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore