காட்டு யானை தாக்கியதில் பேருந்து கவிழ்ந்தது – 10 பேர் காயம்

கதிர்காமம் – புத்தல வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற சம்பவத்தில், காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

சிலாபத்திலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore