நேபாளத்தில் கடந்த 26ஆம் திகதி போடேகோஷி நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன.
சுமார் 8 மாவட்டங்கள் வெள்ளம், சேறு மற்றும் பாறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 1,252 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 4,875 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 6,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 8,000 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்படும் உடல்கள் பல அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், மரபணு பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 600 பேர் சிக்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களை மீட்கும் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தை உலுக்கியுள்ள இந்த வரலாறு காணாத பேரிடரில், தொடர்ந்து உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானோரின் நிலைமை இன்னும் தெரியாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





