கலகஹா, நில்லம்ப – குருக்கலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, சமையலறையில் இருந்த புளியம்பழத்தை உண்ண முயன்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதால் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
சடலம் பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
⚠️ சிறு குழந்தைகள் உணவு உண்ணும் போது பெற்றோர் மற்றும் பெரியவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





