வியட்நாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஒன்றில் 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நான்கு விமானப் பணிப்பெண்கள் பற்பசைக் குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 227 பேர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் தண்டிக்கப்பட்ட 11 பேருக்கு ஹோ சி மின் நகர மக்கள் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





