கமு/சது/ மஜீட்புர வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு வைர விழா – 2026 நிகழ்வு இன்று (15) காலை பாடசாலை முற்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
1966.09.15 அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, தனது 60 ஆண்டுகால கல்விப் பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு இவ்வைர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் Y.B. முகம்மட் இஸ்மாயில் – JP (SLPS-I) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் (SDEC), பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
60 ஆண்டுகால கல்விப் பயணத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலையின் வரலாறு மற்றும் சாதனைகளைப் போற்றும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்வின் மூலம் கடந்த ஆறு தசாப்தங்களாக கல்விச் சேவையாற்றி வரும் மஜீட்புர வித்தியாலயத்தின் பெருமைமிகு கல்விப் பயணம் கொண்டாடப்பட்டது.
💐 60 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்த மஜீட்புர வித்தியாலயத்திற்கு இனிய வைர விழா வாழ்த்துகள்! 💎🎓





