சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பினால் சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் தேவையான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் வைத்தியர் முஹம்மட் அலியார் நபீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், கிழக்கு மாகாண கால்நடைகள் ஆணையாளர் வைத்தியர் M. நதீர், சம்மாந்துறை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் M.M. றிஸ்கா, வைத்தியர் ஐனாபா ஜஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் M.I.M. றமீஸ் ஹபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட அதிதியாக ஓய்வுபெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகரும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான M.S. அப்துல் மஜீத் கலந்துகொண்டார்.
வைத்தியசாலையின் தேவைகளை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட இந்த உதவியானது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





