தரமற்ற குழந்தை டயப்பர்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் கிழிந்து போதல் மற்றும் பயன்படுத்தும்போது மக்கிப் போதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, உரிய இறக்குமதியாளர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையத்தள விபரங்கள் போன்ற கட்டாய தகவல்கள் குறிப்பிடப்படாமல், 85ஆம் இலக்க கட்டளையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி விநியோகித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கொட்டாவை வர்த்தக நிலையத்துக்கு ரூ.10,000 அபராதமும், புறக்கோட்டை வர்த்தக நிலையத்துக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான டயப்பர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட லேபிள் தகவல்களை கவனமாக பரிசோதிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

டயப்பர்களில் கிழிதல் அல்லது வேறு ஏதேனும் தரக்குறைபாடுகள் காணப்பட்டால், பொதி மற்றும் கொள்வனவு செய்த பற்றுச்சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore