சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் விடுதலைக்காக சம்மாந்துறையில் கையெழுத்து சேகரிப்பு

  • ஷாதிர் ஏ ஜப்பார்
  • வீடியோ : CLICK_HERE

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி சந்தியில் இன்று (20) காலை கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையும், அவருக்காக விசேட பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் கவனம் செலுத்தி, அவரின் விடுதலைக்கான கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டதுடன், அனோஜன் பாதுகாப்பாக விடுதலை பெற்று நாடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore