நாவலப்பிட்டி மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழையால் மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதிகளில் உள்ள பல வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் பல வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





