நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, 12 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை புதுப்பித்துள்ளது.
இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை (21) முற்பகல் 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔴 கட்டம் 2 – அவதானத்துடன் இருக்க வேண்டிய பகுதிகள்
- காலி: நாகொட, நெளுவ
- கண்டி: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
- கேகாலை: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
- மாத்தறை: பிடபெத்தற
- நுவரெலியா: கொத்மலை, கொத்மலை கிழக்கு
- இரத்தினபுரி: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
- களுத்துறை: பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள
🟡 கட்டம் 1 – விழிப்புடன் இருக்க வேண்டிய பகுதிகள்
- கொழும்பு: சீதாவக்க
- களுத்துறை: இங்கிரிய
- கேகாலை: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
- மாத்தறை: கொடபொல, அக்குரஸ்ஸ
- இரத்தினபுரி: கிரியெல்ல, கலவானை
- காலி: தவலம
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.





