இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி – முதல் 8 மாதங்களில் 2,061.1 மில்லியன் டொலர்

2026ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த சுற்றுலா வருமானம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான முதல் 8 மாதங்களில் சுற்றுலா மூலம் 2,290 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,061.1 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலா வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2026 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 15,35,122 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் சுற்றுலா வருமானமாக 264.4 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது.

2026 ஓகஸ்ட் மாதத்தில் 191,704 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, 2025 ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலா வருமானம் 258.9 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

இதன்படி, மாதாந்த அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாத சுற்றுலா வருமானத்தில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore