நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலையைத் தொடர்ந்து, மழை வேண்டி இலங்கை விமானப்படை விசேட மத வழிபாட்டு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.
இதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Y-12 விமானம் பயன்படுத்தப்பட்டு, புனித பிரித் நீர் நாட்டின் சில பகுதிகளின் மீது வானிலிருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலவும் வறட்சியால் மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், மழை பெய்து காலநிலை சீரடையவும் வேண்டி இந்த மத அனுஷ்டானம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து புனித நீர் நிலப்பரப்பின் மீது தெளிக்கப்பட்டதுடன், மழைப்பொழிவு ஏற்பட்டு வறட்சி நிலைமை தணிய வேண்டும் என பிரார்த்திக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலையின் தாக்கம் காணப்படும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.





