தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் கட்ட சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (20) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔴 கண்டி மாவட்டம்
- பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்
🔴 கேகாலை மாவட்டம்
- தெஹிஓவிட்ட
- அரநாயக்க
- தெரணியகல
- மாவனெல்ல
- யட்டியாந்தோட்டை
- குறித்த பிரதேசங்களைச் சூழவுள்ள பகுதிகள்
🔴 நுவரெலியா மாவட்டம்
- கொத்மலை மேற்கு
- கொத்மலை கிழக்கு
- அம்பகமுவ
- நோர்வூட்
- அதனைச் சூழவுள்ள பகுதிகள்
3ஆம் கட்ட சிவப்பு எச்சரிக்கை என்பது மண்சரிவு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட வேண்டிய அளவிலான அபாயத்தைக் குறிக்கிறது.
குறிப்பாக தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை இன்று (20) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை (21) பிற்பகல் 2.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கு 1ஆம் மற்றும் 2ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளும் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.





