சவூதி மரண தண்டனை: அனோஜனை காப்பாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி உத்தரவு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனோஜன் தொடர்பான விவகாரம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (21) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்டமாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுமாறும், கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர மற்றும் சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

(மூலம்: Newswire)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore