அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில், கிடைக்கக்கூடிய சீட் பெல்ட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் பின்புற இருக்கையில் இரண்டு சீட் பெல்ட்கள் மட்டுமே இருந்தால், இரண்டு பயணிகள் மட்டுமே அங்கு பயணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நபர் நடுவில் அமர்ந்து சீட் பெல்ட் இன்றி பயணித்தால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகனத்தின் இருக்கை மற்றும் சீட் பெல்ட் வசதிகளுக்கு ஏற்ப பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





