22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும், இதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் உயர் நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று பாராளுமன்ற நடவடிக்கைகளின்போது அறிவிக்கப்பட்டுள்ளது.





