செப்டம்பர் மாத வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்

செப்டம்பர் மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருவாய் இலக்கை மாதம் நிறைவடைவதற்கு முன்னரே இலங்கை சுங்கத் திணைக்களம் கடந்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை, நேற்று (23) நிலவரப்படி சுங்கத் திணைக்களம் எட்டியுள்ளது.

அத்துடன், இதுவரை 199,348 மில்லியன் ரூபாய் வருவாயைச் சுங்கத் திணைக்களம் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த வருவாய் இலக்கு 2,206.995 பில்லியன் ரூபாய் ஆகும்.

நேற்று (23) வரையிலான காலப்பகுதியில் சுங்கத் திணைக்களம் 2,058.033 பில்லியன் ரூபாய் மொத்த வருவாயைப் பதிவு செய்துள்ளது.

மேலும், கடந்த 2025ஆம் ஆண்டிலும் இலங்கை சுங்கத் திணைக்களம் தனது வருடாந்த வருவாய் இலக்கை விஞ்சி 2,557.535 பில்லியன் ரூபாய் வருவாயை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore