செ.திவாகரன்
மத்திய மலைநாட்டில்
கடந்த சில நாள்களாக இடைவிடாது பெய்து வரும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது (25) இன்று காலை முதல் இடைவிடாது கடும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கடந்த (20) ஆம் திகதி முதல் இடை விடாது கொட்டி தீர்க்கும் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
🚨நுவரெலியாவில் கடும் மழை, பனிமூட்டம் – வாகனச் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை.
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹாவா-எலிய, கந்தப்பளை, நானுஓயா, டெஸ்போட், ரதல்ல குருக்கு வீதி மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் இன்று (25) அதிகாலை முதல் நிலவும் இந்த மாறுபட்ட காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் குளிரும் நிலவி வருகிறது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகளில் எதிரே வரும் வாகனங்களை அவதானிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனங்களின் வேகத்தைக் குறைத்துச் செலுத்த வேண்டும் எனவும் ,முகப்பு விளக்குகளை (Fog lights) ஒளிரவிட்டுப் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன் செல்லும் வாகனங்களுக்கும் தமக்கும் இடையில் போதிய இடைவெளியைப் பேணுதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாகனப் போக்குவரத்து நிலவும் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி ஆகிய பிரதான வீதிகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீரேந்து பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக அணைக்கட்டுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் லக்ஷ பான மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங் களின் வான் கதவுகள் அடிக்கடி திறக்கப்படு வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக் கத்தில் அடிக்கடி அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோடுவதாகவும் தெரி விக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மண் திட்டுகளுக்கு அருகாமை யில் வசிப்ப வர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் பல இடங்களில் சிறிய அள வில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள் ளாகிய போதிலும் மழை நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் மிக அவதானத் துடன் வாகனங்களை செலுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட் டுக்கொண்டுள்ளது.





