முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்கள் தன்னார்வத்துடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்
ஷாதிர் ஏ ஜப்பார்
புகைப்படங்களை பார்வையிட : CLICK_HERE
உலக உளநல தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அன்பகம் உளநலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று (22) சிறப்பாக இடம்பெற்றன. இதன்போது விழிப்புணர்வு நடைபவனி, வீதி நாடகம் மற்றும் உளநல சிகிச்சையில் முன்னேற்றம் கண்ட நோயாளர்களின் அனுபவப் பகிர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாஷங்கர் தலைமையில், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர். நியாஸ் அஹமட் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலாராணி இஸ்ஸடின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சியாத் இஸ்மாயில், உளநல மருத்துவ நிபுணர் டாக்டர் வி. சிந்துஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் பிராந்திய மார்பு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ. கபூர் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு முன்றலில் நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உளநலத்தின் முக்கியத்துவம், உளநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூக விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது
அன்பகம் உளநலப் பிரிவின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்களால் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் சமகால சமூகப் பிரச்சினைகளையும் அவற்றுடன் தொடர்புடைய உளநலச் சவால்களையும் பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நாடகம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அன்பகம் உளநலப் பிரிவில் சிகிச்சை பெற்று முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்கள் தாமாக முன்வந்து தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டமை அமைந்தது.
தொடர்ந்து உரையாற்றிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலாராணி இஸ்ஸடின், இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளில் உளநல சிகிச்சை பெற்ற நோயாளர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பொதுவாக மிக மிக அரிதாகவே இடம்பெறுவதாகத் தெரிவித்ததுடன் சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்கள் தன்னார்வத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கதொரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய அனுபவப் பகிர்வுகள் உளநல சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், உளநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூகப் புரிதலை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்பாடுகளிலும் செயற்பாடுகளிலும் பங்களிப்புச் செய்த அன்பகம் உளநலப் பிரிவின் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உலக உளநல தின நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு
– ஷாதிர் ஏ ஜப்பார் –
முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்கள் தன்னார்வத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்
உலக உளநல தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அன்பகம் உளநலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று (22) சிறப்பாக இடம்பெற்றன. இதன்போது விழிப்புணர்வு நடைபவனி, வீதி நாடகம் மற்றும் உளநல சிகிச்சையில் முன்னேற்றம் கண்ட நோயாளர்களின் அனுபவப் பகிர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாஷங்கர் தலைமையில், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர். நியாஸ் அஹமட் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலாராணி இஸ்ஸடின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சியாத் இஸ்மாயில், உளநல மருத்துவ நிபுணர் டாக்டர் வி. சிந்துஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் பிராந்திய மார்பு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ. கபூர் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு முன்றலில் நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உளநலத்தின் முக்கியத்துவம், உளநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூக விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது
அன்பகம் உளநலப் பிரிவின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்களால் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் சமகால சமூகப் பிரச்சினைகளையும் அவற்றுடன் தொடர்புடைய உளநலச் சவால்களையும் பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நாடகம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அன்பகம் உளநலப் பிரிவில் சிகிச்சை பெற்று முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்கள் தாமாக முன்வந்து தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டமை அமைந்தது.
தொடர்ந்து உரையாற்றிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலாராணி இஸ்ஸடின், இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளில் உளநல சிகிச்சை பெற்ற நோயாளர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பொதுவாக மிக மிக அரிதாகவே இடம்பெறுவதாகத் தெரிவித்ததுடன் சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் கண்ட இரு நோயாளர்கள் தன்னார்வத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கதொரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய அனுபவப் பகிர்வுகள் உளநல சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், உளநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூகப் புரிதலை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வின் ஏற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொண்ட அன்பகம் உளநலப் பிரிவின் மருத்துவ அதிகாரிகளான டாக்டர் ரிஸானா சுல்தான், டாக்டர் எம். ஏ. எம். அஃப்ரார், டாக்டர் ஏ. சி. எஃப். உனைஸா, தாதிய பரிபாலகர்கள், மற்றும் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் ஏ. ஜே. நஜீபா ஆகியோருக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது





