கொட்டும் மழையிலும் டயகாம ஈஸ்ட் வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

டயகாம ஈஸ்ட் வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் (26) இன்றைய தினம் வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

டயகாம ஈஸ்ட் செல்லும் வீதி டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் போதும் இம்மாதம் (20) ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் நான்கின் மூன்று பங்கு வீதி அடித்து சென்றுள்ளது தற்போது
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை திருத்தம் செய்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் போக்குவரத்துகள் முடங்கின.

குறித்த வீதியில் முச்சக்கர வண்டி மாத்திரம் தற்போது சென்று வரக்கூடியவாறு உள்ளது அதுமட்டும் இன்றி வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதில் குறிப்பாக நிறைமாதக் கர்ப்பவதிகள் மற்றும் தீவிர நோயாளர்களை இவ்வீதிகளூடாகக் கொண்டுசெல்லும்போது அவர்கள் வலியால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு சாரதிகள் தோட்டத் தொழிலாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது
எமது வீதியினை புனரமைத்து தராமல் எந்த ஒரு அரசியல்வாதியும் வாக்கு கேட்டு வரவேண்டாம் என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டினர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore