சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாக 48 வயதுடைய ஒருவர் கைது!

சட்டவிரோத பிரமிட் திட்டத்தின் மூலம் நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்ததுடன், பணச்சலவை நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று (நவம்பர் 05) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தின் கீழ் நிதி நிறுவனமொன்றை நிர்வகித்து வந்ததுடன், அதில் பணத்தை முதலீடு செய்தவர்களின் நம்பிக்கையை மீறி மோசடி செய்ததாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்துதல், அதனை மேம்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் நம்பிக்கையை மீறி மோசடி செய்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore