அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள் குழுவொன்று, ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





