நிச்சயதார்த்த விழாவில் எதிர்பாராத விபத்து; அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸுக்கு காயம்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 28 வயதுடைய லான்ஸ் மோரிஸ், தனது நிச்சயதார்த்த விழாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்தில் காயமடைந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தனது பெற்றோரின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வழுக்கி கண்ணாடித் துண்டுகள் மீது விழுந்துள்ளார். இதனால் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் வலது கை மூலம் பந்துவீசும் வீரர் என்பதால், இந்தக் காயம் அவரது பந்துவீச்சுத் திறனை நேரடியாகப் பாதிக்காது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், காயத்திலிருந்து குணமடைய சுமார் நான்கு வாரங்கள் தேவைப்படுவதால், அந்தக் காலப்பகுதியில் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்துகொண்ட லான்ஸ் மோரிஸ், சுமார் 20 மாதங்களுக்குப் பின்னரே அண்மையில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய அவர், 10 ஓவர்களில் 29 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டும் அடங்கியிருந்தது.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் மீண்டும் விளையாடத் தயாராக வேண்டும் என அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

தொடர்ச்சியான காயங்களால் பாதிக்கப்பட்டு வந்த லான்ஸ் மோரிஸுக்கு, நிச்சயதார்த்த விழாவில் இடம்பெற்ற இந்த எதிர்பாராத விபத்து மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore