திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

சம்மாந்துறைப் பிரதேசத்தில் திருமண முறிவுகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக குடும்பக் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (17) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மீராலெவ்வை அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கும் சம்மாந்துறை காதி நீதிபதி எம்.எல். தாஸிம் அவர்களுக்கும் இடையில் பிரதேசத்தில் நிலவும் குடும்ப மற்றும் திருமணப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, சம்மாந்துறைப் பிரதேசத்தில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், திருமண நடைமுறைகள், திருமணச் சட்டங்கள், திருமண முறிவுகள், விவாகரத்து மற்றும் ‘பஸ்க்’ (திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்தல்) உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, இவ்வாறான பிரச்சினைகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரதேசத்தின் குடும்பக் கட்டமைப்பில் உருவாகும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், சம்மாந்துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளும் அடையாளம் காணப்பட்டன.

இதன்போது, குறித்த விடயங்கள் தொடர்பில் காதி நீதிபதியினால் அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், குடும்பக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கிலும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore