சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்திற்கு அகில இலங்கை தேசிய விருது!


​
2025ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதப் போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் பிரதேச சபைகளுக்கிடையில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக, சம்மாந்துறை பிரதேச சபையின் அமீர் அலி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

​தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் ஏற்பாட்டில், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு (13.11.2026) வெள்ளிக்கிழமை அன்று, தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்நூலகத்திற்கான தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நூலகத்தின் நூலகர் ஏ.ஆர்.எம். இல்யாஸ் அவர்களிடம் இச்சிறப்புமிக்க விருது உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

​வாசிப்புப் பழக்கத்தை ஊருக்குள் தீவிரமாக ஊக்குவித்தல், நூலகச் சேவையினை நவீன முறையில் மேம்படுத்தல் மற்றும் அறிவுசார் சமூகத்தினைக் கட்டியெழுப்புதல் போன்ற உன்னத நோக்கங்களுக்காக நூலகம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது.

​இச்சாதனைப் பயணத்திற்குப் பின்பலமாய் நின்று உழைத்த சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. பஸ்மிலா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுல்பா, நூலகர் ஏ.ஆர்.எம். இல்யாஸ், நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள், நூலக மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் அனைத்து தரப்பிலுமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore