நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

நுவரெலியா – தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (14) முற்பகல் சுமார் 11.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தும், நுவரெலியாவிலிருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த மற்றுமொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 28 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore