இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

நுவரெலியா பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது.

நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று (14) காலை 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாவும் இவர்களில் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் இதில் சிலர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பி உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் சிறைச்சாலை பேருந்தின் சாரதி உட்பட 4 பேரும் திருமண நிகழ்வுக்காக சென்ற பேருந்தில் 24 பேரும் காயம் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கிச் சுற்றுலா சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் குழுவினர் பயணித்த பேருந்தொன்று எதிர் திசையில் நுவரெலியா போரலந்த பகுதியிலிருந்து நானுஓயா டெஸ்போட் வழியாக அகரப்பத்தனை பகுதிக்குத் திருமண நிகழ்வு ஒன்றுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில் நுவரெலியா போரலந்த பகுதியிலிருந்து நானுஓயா டெஸ்போட் வழியாக அகரப்பத்தனை நோக்கி பயணித்த சாரதியின் அதிவேகமாக ஆபத்தான மற்றும் கவனயீனமாக பேருந்தைச் இயக்கியதே விபத்துக்க்கு முக்கியக் காரணம் என சந்தேகிக்கும்
பொலிஸார் சாரதியை கைது செய்து மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவரை நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore