இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முல்லிக்குளம் காற்றாலை மின் பரிமாற்றத் திட்டத்தின் (Mullikulam Wind Power Transmission Project) Lot A பகுதியின் நிர்மாண ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதியுடன் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டி அடிப்படையில் நடத்தப்பட்ட கேள்விப்பத்திர அழைப்பில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றிருந்த நிலையில், மதிப்பீட்டின் பின்னர் இந்தியாவின் RS Infraprojects Pvt Ltd நிறுவனம் குறைந்த விலையுடன் தகுதியான விண்ணப்பதாரராக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தின் பெறுமதி 6.045 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ. 499.66 மில்லியன்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lot A திட்டத்தின் கீழ் முல்லிக்குளம் 220/33 கிலோவோல்ட் மின் உபநிலையத்தின் (Grid Substation) உள்ளீட்டு பகுதி மற்றும் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கோடுகள் இரண்டு நிர்மாணிக்கப்படவுள்ளன.
மின்சக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ⚡🇱🇰🇮🇳





