இந்தியாவின் புதிய விசா விதிமுறை: 180 நாட்களுக்குள் தங்கியிருப்பு பதிவு அவசியம்

India அரசு வெளிநாட்டவர்களுக்கான குடிவரவு விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Immigration and Foreigners (Amendment) Rules 2026 இன் கீழ், இந்தியாவில் 180 நாட்களுக்கு மேல் தங்கவிரும்பும் வெளிநாட்டவர்கள், தற்போது நாட்டுக்கு வந்த நாளிலிருந்து 180 நாட்களுக்குள் எந்த நேரத்திலும் தங்களது பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 180 நாட்கள் நிறைவடைந்த பின்னர் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

அதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்தை கடந்த பின்னர் பதிவு செய்வதற்கு அவசர மற்றும் விசேட சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியக் குடியுரிமை தொடர்பாக குழந்தைகளுக்கான விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்து, குழந்தையின் இந்தியக் குடியுரிமையைத் தொடர விரும்பினால், அந்தக் குழந்தைக்கு பதிவு கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் வசிக்கும் குழந்தை ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றால், அதன் தொடர்பான தகவலை 30 நாட்களுக்குள் பதிவு அதிகாரிக்கு பெற்றோர் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் கீழ், குடிவரவு தொடர்பான புகார்கள் மற்றும் மேல்முறையீடுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்பட முடியும். மேல்முறையீடுகள் 60 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள், இந்தியாவின் குடிவரவு நிர்வாகத்தை நவீனப்படுத்தி, வெளிநாட்டவர்களுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதுடன், சட்ட அமுலாக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 🇮🇳✈️📄

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore