வினையாய் முடிந்த Home Tour வீடியோ நகை, பணம் திருட்டு!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள மோகனி என்ற கிராமத்தில் ரச்னா குர்ஜார் என்ற பெண் வசித்து வருகிறார்.

இவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி பலதரப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

குறிப்பாக தனது வீட்டை சுற்றிக்காட்டி ஹோம் டூர் வீடியோக்களையும் தனது சேனலில் பதிவேற்றி உள்ளார். அதிலும் ஸ்பெஷலாக மற்றொரு வீடியோவில் வீட்டில் இருக்கும் நகைகள், பணம் அனைத்தையும் காட்டியுள்ளார்.

இவரது சேனலுக்கு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 6 ஆம் திகதி அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர்.

திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 8 லட்சம் ரூபா முதல் 10 லட்சம் ரூபா வரை இருக்கும் என என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரச்னா அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பல், சிசிடிவி கேமராக்களின் கோணங்களை உஷாராக திருப்பி வைத்ததாலும் முகமூடி அணிந்திருந்தாலும் அவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore