இலங்கை மத்திய வங்கி (CBSL), பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதி வருமானத்தில் அனுமதிக்கப்பட்ட செலவுகளை மேற்கொண்ட பின்னர் எஞ்சியுள்ள தொகையை கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும் என புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
புதிய ஒழுங்குவிதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட காலண்டர் மாதத்தில் பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தின் மீதித் தொகை அடுத்த மாதத்தின் 10ஆம் தேதிக்குள் இலங்கை ரூபாயாக மாற்றப்பட வேண்டும்.
இந்த புதிய கட்டுப்பாடு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணய வருமானத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதும், நாட்டின் நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.





