ஜப்பான் – நெதர்லாந்து விறுவிறுப்பான ஆட்டம் சமநிலையில்

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் உள்ளது.

இந்நிலையில் 23வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் கடந்த 11ம் திகதி ஆரம்பமானது.

மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் இம்முறை இந்த தொடர் நடத்தப்படுகின்றது.

12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து , ஜப்பான் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டத்தின் 2வது பாதி மிகவும் பரபரப்பு மாறியது.

இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க தங்களது முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன்படி ஆட்டத்தின் 2வது பாதியில் 50வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வென் டிஜக் கோல் அடித்தார்.

இதையடுத்து, ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா கோல் அடித்தார்.

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து, ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கிரைசென்சியொ சம்மர்வெலி கோல் அடித்தார்.

இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.

அதனை தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 88வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா கோல் அடித்தார்.

இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.

இதனால் ஆட்டத்தின் இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து , ஜப்பான் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் குறித்த இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore