சினிமாவில் இருந்து திடீரென விலக முடிவெடுத்த பிரபல நடிகை!

பல பிரபலங்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பெரிய கனவோடு களமிறங்குவார்கள், அப்படி சிலர் சாதிக்கவும் செய்வார்கள்.

பலருக்கு கடின உழைப்பு போட்டும் வெற்றி கிடைக்காமல் இருக்கும். ஒருசிலர் இது நமக்கு செட்டே ஆகாது என்று வேறொரு துறையை தேர்ந்தெடுத்து சென்றுவிடுவார்கள்.

இப்போது சினிமாவில் ஜொலித்த ஒரு நடிகை நடிப்பை விட்டு விலக முடிவு எடுத்த விஷயத்தை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தற்போது ஒரு நடிகை பெரிய கனவுடன் நடிக்க தொடங்கி பின் திடீரென அதில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார், அவர் வேறுயாரும் இல்லை நடிகை நிவேதா பெத்துராஜ் தான்.

இவர் ஒரு பேட்டியில், கடந்த 2023 ஆம் ஆண்டோடு சினிமாவுக்கு குட்பை சொல்ல நினைத்தேன். ஆனால் விதி என்னை எதிர்ப்பாராத பாதையில் அழைத்துச் சென்று சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு பிளாக் பஸ்டர் படத்தில் கொண்டு வந்துள்ளது.

என்னை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டு வந்ததற்காக இயக்குனர் நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி. நாக் அஸ்வின் மட்டும் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்காவிட்டால் இந்நேரம் நான் இமயமலைக்கு சென்றிருப்பேன் என கூறியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore