பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 23,000 தாதியர்களுக்கும், சுமார் 14,000 கனிஷ்ட ஊழியர்களுக்கும் வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தாதி ஒருவருக்கு இரண்டு தாதியர்களின் வேலைப் பழுவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில சந்தர்ப்பங்களில் தாதியர்கள் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் தாங்க முடியாத வேலைப் பளு உருவாகியுள்ளதாகவும், அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த நிலைமையே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை உடனடியாக தயாரிக்காவிட்டால், வைத்தியசாலை கட்டமைப்பு மேலும் வீழ்ச்சியடையும் என தென்னே ஞானானந்த தேரர் எச்சரித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore