கட்டாருக்கு எதிரான ஆட்டத்தில் போஸ்னியா அபார வெற்றி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘குரூப் பி’ ஆட்டத்தில், கட்டாரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் போஸ்னியா உலகக் கிண்ணத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் வலுப்படுத்திக்கொண்டது.

போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் கெரிம் அலஜ்பெகோவிச் கோல் அடிக்க போஸ்னியா முன்னிலையை பெற்றது. 34 ஆவது நிமிடத்தில் கட்டார் வீரர் சுல்தான் அல்-பிரேக் மீது பட்டு திசைமாறி ‘ஓன் கோல்’ ஆக மாற போஸ்னியா 2-0 என முன்னிலையை பெற்றது

இதனையடுத்து, 42 ஆவது நிமிடத்தில் கட்டார் அணி வீரர் ஹசன் அல் ஹைடோஸ் கோல் அடித்து முதல் பாதி நேர ஆட்டத்தின் போது 2 -1 என்ற கணக்கில் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் போது, 80 ஆவது நிமிடத்தில் எர்மின் மிமிக் கோல் அடிக்க போஸ்னியா 3-1 கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ‘குரூப் பி’ பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்த போஸ்னியா இந்தத் தொடரில் ‘ரவுண்ட் ஆஃப் 32’ (Round of 32) சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. மொத்தம் உள்ள 12 பிரிவுகளில் மூன்றாம் இடத்தை பிடித்த அணிகளில் சிறந்த எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore