ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான நீதியரசர்களை நியமிப்பதை நிறைவேற்று அதிகாரம் தாமதப்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது என உண்மை தேடுபவர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து, அவ்அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை என்பது ஒரு நீதியரசர் தீர்ப்பு எழுதுவதில் கொண்டுள்ள சுதந்திரத்தில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை எனவும், அவர்களின் தொழில்முறை வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நிறுவனக் கட்டமைப்பில் நிலவும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைத்தன்மை ஆகியவற்றின் மீதே தங்கியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore