உயிரிழந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் ஈரான் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் திடீர் தோற்றம்!

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளார்.

போர் தொடங்கிய முதல் நாளிலேயே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களில் அவர் உயிரிழந்ததாக ஈரான் அரசுடன் தொடர்புடைய சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவரது இல்லத்திற்கு அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பல மாதங்கள் அவர் பொதுமக்கள் பார்வைக்கு வராததால் அவரது நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவின.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற காமெனியின் இறுதி ஊர்வலத்தில் கருப்பு உடையணிந்த மில்லியன் கணக்கான துக்க அனுசரிப்பாளர்களுடன் அஹ்மதிநெஜாத் கலந்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

மறுபுறம், முன்னாள் ஜனாதிபதிகள் மொஹம்மது கதாமி மற்றும் ஹசன் ரௌஹானி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

ஈரானின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (Newswire / Telegraph)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore