968 நாளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த பும்ரா!

பர்மிங்ஹாமில் இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி, துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.

அடுத்து களமிறங்கிய இந்தியா 45.2 ஓவரில் 262 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில், பும்ரா தனது அபார பந்துவீச்சால் இரு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி புரூக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா 30 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது 31 விக்கெட்டுடன் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதேபோல், ஹாரி புரூக்கின் விக்கெட் பும்ராவின் ஒருநாள் கிரிக்கெட்டில் 150 ஆவது விக்கெட்டாகும்.

இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளைக் கடந்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் (4,605 பந்துகள்) பும்ரா 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முகமது ஷமி (4,070 பந்துகள்) முதலிடத்திலும், குல்தீப் யாதவ் (4,513 பந்துகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore