சம்மாந்துறை மஜ்லிஸ் ஆஷுரா கௌரவ அமீருக்கு பாராட்டு..

(மின்மினி மின்ஹா + ARM மஜீட்)

சம்மாந்துறை மஜ்லிஸ் ஆஷுரா சபையின் கௌரவ தலைவராக தெரிவு செய்யப்பட்ட விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (15) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து சம்மாந்துறை மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் வளாகத்தில், பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் தலைவரும், சம்மாந்துறை மத்தியஸ்தர் சபையின் தவிசாளருமான அல்ஹாஜ் மௌலவி எம்.வை. அஹமது ஜலீல் (JP) தலைமை தாங்கி, வரவேற்புரையையும் தலைமையுரையையும் நிகழ்த்தினார்.

தனது உரையில், அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார் அவர்கள் மஹல்லாவின் தலைவராக செயற்பட்டவர் இன்று மஜ்லிஸ் ஆஷுரா அமைப்பின் அமீராக தெரிவு செய்யப்பட்டிருப்பது சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.

எமது மஹல்லாவைச் சேர்ந்த பலர் பல்வேறு பொது மற்றும் சமய அமைப்புகளில் பொறுப்பேற்று சமூகப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, மஸ்ரபுல் இஸ்லாமியு அமைப்பின் தலைவராகவும், குவாஷி நீதிபதியாகவும் செயற்பட்டுள்ளனர். மேலும் மௌலவி.கே.எல். ஆதம் பாவா (மதனி) ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சகாத் சபையின் பிரதித் தலைவராகவும் பணியாற்றி வருவதாகவும், முன்னாள் தலைவர் ஒருவர் தற்போது பள்ளிவாசல் நிர்வாகத்தின் கௌரவமான பதவியை பொறுப்பேற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடனும் பொறுப்புணர்வுடனும் இந்த நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தலைமையுறையில் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதம நம்பிக்கையாளர் மௌலவி கே.எம்.கே.ஏ. ரம்ஷின் காரியப்பர், ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எல்.எச். பஷீர் மதனி, ஓய்வுபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தரும் குவாஸி நீதிபதியுமான அல்ஹாஜ் எம்.எல். தாஸிம் (JP), மஸ்ஜிதுன் நஹர் இமாம் மௌலவி எம்.ஏ.எம். ஜாபீர், மஜ்லிஸ் ஆஷுரா பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எம். இலியாஸ்(ஓய்வுபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர்), மஜ்லிஸ் ஆஷுரா செயலாளர் அல்ஹாஜ் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் (ஓய்வுபெற்ற அதிபர்)உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

நன்றியுரையை மஸ்ஜிதுன் நஹர் நிர்வாகச் செயலாளரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஓய்வுபெற்ற முகாமையாளருமான ஏ. அப்துல் அசீஸ் நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சியை மஸ்ஜிதுன் நஹர் நிர்வாக உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.எச். எம். சித்தீக் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், மௌலவிமார்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு, அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார் அவர்களுக்கு தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore