சர் கார்ஃபீல்ட் சோபர்ஸுக்கு அஞ்சலி: LPL வீரர்கள் கறுப்பு பட்டி அணிந்து விளையாடவுள்ளனர்

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள், மறைந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளனர்.

இன்று (18) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் LPL போட்டிகளுக்கு முன்னர், சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் மறைவையொட்டி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.

அனைத்து LPL அணிகளின் வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்து இந்த கிரிக்கெட் ஜாம்பவானுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என SLC தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 1980களின் ஆரம்ப காலப்பகுதியில், குறிப்பாக 1983 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போது சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் பணியாற்றியதுடன், இலங்கை கிரிக்கெட்டுடன் அவர் சிறப்பான உறவை கொண்டிருந்ததாக SLC குறிப்பிட்டுள்ளது.

“சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் மறைவு கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பாகும். அவரது அசாதாரணமான கிரிக்கெட் பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள தலைமுறை வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore