களுத்துறை நீதவான் நீதிமன்றம், பேருவளையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி, கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட சோதனையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி ரூ.355க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், அரசாங்க நிர்ணய விலை ரூ.260 எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 5 கிலோகிராம் பொதிகள் ரூ.1,775க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அச்சிடப்பட்டுள்ள MRP விலையை கவனிக்குமாறும், அதிக விலை வசூலிக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.





