25 ஆண்டுகளுக்கு முன்னர் வெலாகெதர பகுதியில் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில், ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில், டியாகவிட்ட, வெலாகெதர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, கற்கள், தடிகள் மற்றும் வாள்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் திருமணமாகாத ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
வழக்கு விசாரணையின் பின்னர், கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி, குறித்த குழுவில் இடம்பெற்ற தந்தை, தாய், அவர்களின் இரு பிள்ளைகள் மற்றும் மற்றொரு நபர் ஆகிய ஐவரும் கொலை மற்றும் கடுமையான தாக்குதல் குற்றங்களில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





