பிலியந்தலை, பொகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சந்தேகத்திற்கிடமான இருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





