நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பதப்படுத்தப்பட்ட திரவ பாலுக்கான புதிய பாதுகாப்பு தரநிலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையில் விற்பனை செய்யப்படும் அல்லது விநியோகிக்கப்படும் அனைத்து பதப்படுத்தப்பட்ட திரவ பாலும் SLS 1815 தரநிலைக்கு இணங்க இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலில் உள்ள அஃப்லாடொக்சின் (Aflatoxin) அளவு ஒரு கிலோகிராமுக்கு 0.5 மைக்ரோகிராம் (0.5 µg/kg அல்லது ppb) க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வரம்பை மீறும் பாலை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், பொதியிடுதல், சேமித்தல் அல்லது விற்பனை செய்தல் தடை செய்யப்படும்.
புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 8 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதற்கு முன் தேவையான இணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் உணவு பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தவும், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக CAA தெரிவித்துள்ளது.





